கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சின்னசேலம் வட்டம் கருங்குழி கிராமத்தில் இன்று பெரியசாமி என்பவர் வயலில் பயிர் நடுவதற்காக வந்த பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த உமா (வயது 30) பெரியம்மாள்(வயது 35) ஆகிய இருவரும் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.