திருவண்ணாமலை: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி பழனிச்சாமி அவரது மனைவி வள்ளி, இவர்களுக்கு ஐந்து பெண், ஒரு ஆண் குழந்தை என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில் பயணிச்சாமிக்கும் வள்ளிக்கும் கடந்த ஒரு வாரமாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் மீண்டும் பழனிச்சாமிக்கும் வள்ளிக்கும் சண்டை ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என ஐந்து பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதில் ஒரு பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரந்தவாடி கிராமத்தில் வசித்து வரும் பழனிச்சாமிக்கும் வள்ளிக்கும் ஐந்து பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என ஆறு பேர் உள்ள நிலையில் பெரிய மகள் சௌந்தரியை திருமணம் செய்து கொடுத்த நிலையில் நான்கு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பழனிச்சாமி வள்ளியும் குடும்பத்துடன் உறங்கி உள்ளனர், அப்போது பழனிச்சாமிக்கும் வள்ளிக்கும் சண்டை ஏற்பட்டு சண்டை முற்றி பழனிச்சாமி ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவியை வெட்டி கொலை செய்தார்.
நான்கு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தையை வெட்டி உள்ளார் இதில் மனைவி வள்ளி மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை துடிதுடித்து இறந்த நிலையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதில் ஒரு பெண் குழந்தை பூமிகா என்ற குழந்தை வெட்டு காயத்துடன் அழுதபடி இருந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை பழனிச்சாமி அம்மா வீட்டின் அருகே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிகாவை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து திருவண்ணாமலை கிராம காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த பயணிச்சாமி மனைவி வள்ளி, 15 வயது திரிசா, 14 வயது மோனிஷா, 7 வயது சிவசக்தி, 4 வயது தனுஸ்ரீ ஆகிய ஆறு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவன் பழனிசாமி மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலசப்பாக்கம் சுற்று வட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.