இம்முறை சோளப்பயிர்ச் செய்கைக்கு, சேனா படைப்புழுக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேனா படைப்புழுக்கள் மூலம் சோளப் பயிர்கள் சேதம் அடைந்த சம்பவங்கள் இதுவரை 04 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பிரதான விவசாய நிபுணர் கலாநிதி புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சேனா படைப்புழுவினால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பம் தற்போது விவசாயத் திணைக்களத்திடம் உண்டு. அது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒட்டுண்ணி ஒன்று பயிர் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு விடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.