தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது: அமைச்சர் முத்துசாமி

சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் 30% முதல் 40% காலியிடங்கள் உள்ளன, எனவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம் என்றும் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல பணிகள் தாமதமாகி வருகிறது, அதனைத் தொடர்ந்து இன்று 25 பணியாளர்கள் புதிதாக நியமித்து உள்ளதாகவும் அவர்கள் 4 மாதம் காலம் டெல்லி, குஜராத் போன்ற இடங்களுக்கு சென்று பயிற்சியினை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

நமக்கு மொத்தம் 48 ஏடிகள் தேவை ஆனால் 17 பேர் மட்டுமே முன்பு பணிபுரிந்தனர் அதனால் இன்று 25 பேரை நியமித்துள்ளோம் எனவே வேலை தாமதமின்றி வேகமாக நடக்கும் என்றார்.

வண்டலூர் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றிய கேள்விக்கு, புதிய பேருந்து முனையப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன, பொங்கல் பண்டிகைக்குள் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது, அதுவே எங்கள் நோக்கம், அதற்கான பணிகளை செய்து வருகிறோம். கோயம்பேடு காய்கறி கழிவுகளை மறு சுழற்சியில் ஈடுபடுத்துவதற்கான கேள்விக்கு, அதனை ஒரு வாரத்திற்கு பின்னர் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசுகையில், அரசியலில் ஆரம்பம் முதலே நல்ல பணிகளை செய்து வருகிறார். அவர் எல்லா மூத்த தலைவர்களுடனும் பணிபுரிந்துள்ளார், என்றும் அவர் அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.