தமிழ்நாட்டிற்கு மொத்தம் 4 முதல்வர்கள்… சேலத்தில் வச்சு சம்பவம் பண்ண ஈபிஎஸ்!

சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான

தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதிமுகவின் கோட்டை

அதில், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதை யாராலும் அசைக்கவும் முடியாது. நுழையவும் முடியாது. மக்களுக்கு எதிராக நடைபெறுகிற திமுக ஆட்சியை கண்டித்து மக்கள் போராட திரண்டு வருகின்றனர். அதற்கு இந்த ஆர்ப்பாட்டமே சான்று. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா. அவர் இந்த நாட்டுக்கு உழைத்தவரா? இந்த மக்களுக்கு என்ன செய்தார்?

அமைச்சராகும் உதயநிதி

அவர் அமைச்சரானால் பாலாறும், தேனாறும் ஓடுமா? கருணாநிதி மகன் ஸ்டாலின். ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர்கள் வாழையடி வாழையாக குடும்ப ஆட்சி செய்வதற்கு இதுவே ஒரு உதாரணம். மாநிலத்தில் ஒரு முதல்வர் தான் இருப்பார்கள். தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி.

தேர்தல் வாக்குறுதிகள்

ஒரு முதல்வருகே தாக்குப் பிடிக்க முடியாது. நான்கு முதல்வர்கள் இருந்தால் தமிழகம் தாக்குப் பிடிக்குமா? ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே திமுக அரசு செய்யவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி வழங்குவது,

கமிஷன் அரசு

கல்வி கடன், பெட்ரோல், டீசல் விலை, முதியோர் உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பினார். திராவிட மாடல் ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் தான் காணப்படுகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தலைவாசல் ஆட்டுப் பண்ணையில் ஆயிரம் கோடி ரூபாயில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

திமுக ஆட்சி

அதை திமுக அரசு இன்னும் முறையாக நடைமுறைபடுத்தவில்லை. ஆத்தூர் நகராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்தோம். இந்த திட்டங்களை மட்டுமே திமுக அரசு திறந்து வைக்கிறது. யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் சூட்டுவது போல திமுக ஆட்சி செய்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல்

தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலுக்குள் செல்கிறது. ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க தற்போதைய ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை திமுக மாவட்ட செயலாளர் போல் நடத்துகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். திமுக அரசு சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றின் வரி உயர்வை உடனடியாக திமுக அரசு குறைத்திட வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.