திருவனந்தபுரம்: துணைவேந்தர் பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்யும் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி அவசியமில்லை என கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமிப்பது தொடர்பான வழக்கில், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை சுட்டிக்காட்டி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
