புகைப்பிடிக்க கூடாது – இளைஞர்களுக்கு சிகரெட் விற்க தடை!

நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் புகைப் பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு தனது நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. புதிய மசோதாவின்படி இளைஞர்கள் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவின் படி, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அல்லது அதற்கு மேல் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் வயதினரைக் கட்டுப்படுத்தும் வகையில், சிகரெட் வாங்க வயது வரம்பை நிர்ணயித்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கம் இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்கும் இலக்குடன் இந்த திட்டம் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா; ஜி7 நாடுகள் கடுப்பு..!

“இந்த மசோதா மூலம் சில்லறை விற்பனையில் சிகரெட் புழக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் என்றும், இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என்றும் நியூசிலாந்து சுகாதாரத் துறை கூடுதல் அமைச்சர் ஆயிஷா வர்ரால் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் 13 வயதுக்கு உட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.