வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பது வழக்கம்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 300 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஏசி பஸ்கள் மற்றும் சொகுசு பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. இதில், பயணிக்க 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. இது பற்றி, போக்குவரத்து கழக அதிகாரிகள், “ஜனவரி 11ஆம் தேதி முதல் பயணம் செய்ய முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் இதற்கான முன்பதிவுகளை மக்கள் தொடங்கலாம் பொங்கலுக்கு செல்ல சிலர் மட்டுமே முன்பதிவு செய்திருக்கின்றனர். பண்டிகை நெருங்க நெருங்க தான் முன்பதிவு அதிகரிக்கும். கடந்த ஆண்டு போலவே தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளையும் இயக்க இருக்கிறோம். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்கும்.” என்று தெரிவித்துள்ளனர்.