மகேஷ் சுப்ரமணியத்துக்கு ஹிட் சீரியலில் வாய்ப்பு

வளர்ந்து வரும் சின்னத்திரை நடிகரான மகேஷ் சுப்ரமணியம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். முறைப்படி நடனம் பயின்றவர் என்பதால் பிரபல நடன நிகழ்ச்சியிலும் அசத்தலாக நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதன்பிறகு தான் இவரை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர் நடித்த சீரியல்களில் 'பகல் நிலவு' 'கடைக்குட்டி சிங்கம்', 'ராசாத்தி' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'முத்தழகு' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையோ சினிமாவோ ஒரு ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் இருந்தாலும் இன்றுவரை இவருக்கு ப்ரேக் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்ட்டும் அமையவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரசாத் என்ற கதாபாத்திரத்தில் இதுவரை நடித்து வந்த வசந்த் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக இனி மகேஷ் சுப்பிரமணியன் நடிக்கிறார். சீரியலில் பிரசாத் கதாபாத்திரத்தின் ட்ராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில் மகேஷ் சுப்ரமணியத்தின் இந்த எண்ட்ரி நிச்சயம் அவருக்கு சிறந்த வாய்ப்பாக அமையுமென சின்னத்திரை வட்டாரத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.