மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் 1,191 ஏக்கர் நிலங்களை, 2018ல் பத்திரப்பதிவு செய்தது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். தற்போதைய ஆதீனம் தரப்பில், ‘‘முந்தைய ஆதீனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளியேற மறுக்கின்றனர்’’ என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.