
‛லைசன்ஸ்' – நயன்தாரா சாயலுக்கு மாறிய ராஜலெட்சுமி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் சினிமாவிலும் பின்னணி பாடகர்களாக கலக்கி வருகின்றனர். இதில், செந்தில் கணேஷ் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து படம் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வியை சந்தித்தது. இதனைதொடர்ந்து அவரது மனைவி ராஜலெட்சுமியும் தற்போது சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்திற்கு ‛லைசன்ஸ்' என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், முதல்பார்வை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அறம் படத்தின் நயந்தாராவை போலவே ராஜலெட்சுமியும் காட்டன் புடவையில் கைக்கட்டி கெத்தாக நிற்கிறார். ராஜலெட்சுமியின் இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.