’வாரிசு பட ரிலீஸுக்கு தடையாக இருக்கும் வாரிசுக்குதான் நாளை பட்டாபிஷேகம்!’ – கடம்பூர் ராஜு

வாரிசு படத்தை ரீலிஸ் செய்யவிடமால் தடுக்கும் வாரிசுக்கு தான் நாளை பட்டாபிஷேகம் நடக்கபோகிறது என்றும், இனிமேல் தான் வேடிக்கை காத்திருக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக அரசினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியபோதுதான் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ இவ்வாறு கூறியுள்ளார்.
image
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 3 கட்டங்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்ட போராட்டமாக பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற நிலையில், இன்று 2ஆவது கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் நடைபெற்றது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
image
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், ”திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வேம் என்று திமுக கூறினர். அது என்னவோ உண்மை தான் இன்றைக்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். பஸ் கட்டணத்தினை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். மகனுக்கு, பேரனுக்கு, உங்கள் வீட்டு டிரைவருக்கு கூட பட்டாபிஷேகம் பண்ணுங்க. மக்கள் தான் பாவம். உங்களிடம் ஆட்சி அதிகாரம் கொடுத்துள்ளனர்.
திமுக மூத்த நிர்வாகிகள், திமுகவினர் அனைவரும் புழுக்கத்தில் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் தான் திமுகவில் வேடிக்கை உள்ளது. திமுகநிர்வாகிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக ஆட்சியில் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று கூறுகின்றனர்.
image
வாரிசு படத்தை ரீலிஸ் செய்யவிடமால் தடுக்கும் வாரிசுக்கு தான் நாளை பட்டாபிஷேகம். அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக படம் எடுக்க முடியும், வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு ரெட்ஜெயண்ட் ரீலிஸ் என்று வந்தால் தான் படத்தினை வெளியிடும் நிலை, சினிமாத்துறை ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதும், திமுகவினர் பட்டாசு வெடிக்காவிட்டாலும் அதிமுகவினர் வெடிப்போம், உதயநிதியை செய்தி துறை அமைச்சராக்க வேண்டும், அதில் தான் சினிமா வருகிறது.
மின்சாரம் கட்டணம் உயர்வு மட்டுமல்ல, மின்வெட்டும் அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இந்த திட்டங்களை நிறுத்துவோம் என்று கூறி இருந்தால் கெட்டிக்காரர்கள். அமைச்சர் கீதாஜீவனை கடுமையான வார்த்தைகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். நாங்கள் சொல்லி இருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இருப்பார்கள். ஆனால் அண்ணாமலை சொல்லியதால் ரெய்டு நடந்து விடும் என்ற பயத்தில் பதில் பேசவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தினை நிறுத்தியது போல சத்துணவு திட்டத்தினையும் நிறுத்தவுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.