Thalapathy, Vishal: தளபதியும் வேணாம், புரட்சி தளபதியும் வேணாம்: விஷால்

ஆர். வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் லத்தி. டிசம்பர் 22ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விழாவில் நடிகர் விஷால் பேச வந்ததும், ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல, வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான் என்று பேச்சை ஆரம்பித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு வழக்கமாக நடக்கும் விஷயம். சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

ஜாங்கித் சாருக்கு கான்ஸ்டபிள் சல்யூட் செய்கிறேன். பல நூறு குற்றங்களை உங்களுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறீர்கள்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்.

வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி, நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை படம் பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிபடுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பேசப்படுவார். நான் எந்த வண்டியில் சென்றாலும் பொன்.பார்த்திபனையும் அழைத்து செல்வேன். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

45 வயது, 32 படம், சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ் பெற்றோருக்கு நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று சொல்லக் கூடாது என்று திட்டினேன். ஆனால், நிஜமாக சொல்கிறேன், எந்த குழந்தையாலும் நடிக்க முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.

ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் இருந்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்கு தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4வது மாடியில் இல்லை, 8வது மாடியில் இருந்தும் கூட குதிக்கலாம்.

மக்கள் தொடர்பாளர் ஜான்சர் சாருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகை சுனைனாவிற்கு நன்றி.

நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள், நன்றி என்றார்.

Rajinikanth:அண்ணாமலைக்கு முதலிடம், உதயநிதிக்கு இடமே இல்லையா?: வம்பில் சிக்கிய ரஜினி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.