அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷியப், ‘நல்ல கதைகளைத் தேடாமல், ஒருவரைப் பார்த்து அதே பாணியில் கதைகளைத் தேர்வு செய்து திரைப்படம் எடுப்பது திரையுலகின் அழிவிற்கு வழிவகுத்துவிடும்’ என்றும் ‘மிகப்பெரிய பட்ஜட்டில் வெற்றித் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற செயல்களால்தான் பாலிவுட்டு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளது’ என்றார்.
இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், “காந்தாரா, புஷ்பா போன்ற திரைப்படங்கள் நல்ல கதைகளை படமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிறது. ‘கேஜிஎஃப்’ போன்ற பெரியத் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும், இது போன்ற பெரிய வெற்றியை அடைய வேண்டும், அதற்காகத் திட்டமிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போது, அது உங்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெரிய வெற்றித் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நல்ல கதைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க தவறிவிடுவீர்கள். இப்படி மிகப்பெரிய பட்ஜெட்டில் வெற்றித் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற செயல்களால்தான் பாலிவுட் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளது. நல்ல கதைகளை தேர்வுசெய்து படமாக்க வேண்டும், அதுதான் படைப்பாளிகளுக்கு தைரியத்தைக் கொடுக்கும்” என்று கூறியிருந்தார்.
I totally totally totally disagree with the views of Bollywood’s one & only Milord.
Do you agree? pic.twitter.com/oDdAsV8xnx
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 13, 2022
இந்நிலையில் பாலிவுட் குறித்து இயக்குநர் அனுராக் காஷியப் பேசியது தவறு என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இது குறித்து ட்வீட் செய்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, அனுராக் காஷியப் பேசிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, “பாலிவுட்டில் புகழ்பெற்ற ஒருவர் பாலிவுட் குறித்து இப்படி பேசியிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். அனுராக் காஷியப் பேசிய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் தொடர் தோல்வி குறித்த உங்களின் கருத்தைப் பதிவிடவும்.