மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் பைரவா அறக்கட்டளையின் சார்பில் ஸ்வர்ணாகர்ஷண கோயில் உள்ளது. இக்கோயிலில் 108 மணிகளைக் கொண்டு கருங்காலி மாலை தயாரிக்கப்பட்டு வருவதாக விஜய் ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் அமைவிடமானது அனுமன்நதி செல்லும் இடத்திலும் கோயிலுக்கு பின்புறம் இடுகாடும் இருப்பதாலும், காசியில் இருப்பதுபோலவே அமைந்துள்ளதாலும் தென்னக காசி என அழைக்கப்படுகிறது.
கோயிலின் நுழைவாயிலில் உள்ள 39 அடி உயரம் கொண்ட பைரவர் சிலையை ஆய்வு செய்த பஞ்சாப் யுனிக் புத்தகம் உலக சாதனை விருது வழங்கியுள்ளது. இங்கு 650 கிலோ எடையில் பஞ்சலோகத்திலான ஆகர்ஷண பைரவர் வீற்றிருக்கிறார். கோயிலைச் சுற்றிலும் 64 பெயர்களில் உள்ள 64 பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டு ஸ்வர்ண பைரவர் பீடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலை 64 முறை சுற்றி வந்து வழிபட்டால் 64 பைரவர்களின் அருளாசி கிடைக்கும். கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாலை முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொழிலில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்றால் இந்த கருங்காலி மாலையை அணியலாம்.
பைரவரின் ஆசீர்வாசத்தை பெற எளிய வழியாக கருங்காலி மாலை உள்ளது. நவக்கிரகங்களில் மிக வலுவானதாகவும், வேகமானதாகவும் செவ்வாய்க்கிரகம் உள்ளது. அந்த கிரகத்திற்குரிய மாலையாக கருங்காலி மாலை திகழ்கிறது. இந்த மாலை அணிந்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவராக விளங்கலாம். வாழ்வில் முன்னேற்றம், குலதெய்வ அருள் கிடைக்கும். சகல கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். பெண்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகள் நீங்கும். கணவன், மனைவி பிரச்னைகள் தீரும். கருங்காலி மாலையை பெறுவதற்கு 98425 99006, 9655199006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என கூறினார்.