போதைப் பொருள் கடத்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் ஒடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தங்கக் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது போல போதைப் பொருள் கடத்தல் நம் நாட்டின் இளம் தலைமுறையை பாதிக்கிறது என்று அவர் கூறினார்.
சுங்கத்துறையின் 60வது ஆண்டு விழாவில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள சுங்கத்துறை அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.