சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில்
அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் முன்பு பெயர் பலகை வைக்கப்பட்டது. அதில் ”உதயநிதி ஸ்டாலின்… இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.