டெல்லி: ஓய்வூதிய பலன்கள் தொடர்பான வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்தவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
