தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் நடிகருமான சந்தானம் அமைச்சராக பொதுப்பேற்றிக் கொண்ட உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதியின் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் “நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.