கர்ப்பமாக இருக்கும் மெகா குடும்பத்து மருமகளின் வயதை கூகுள் செய்யும் மக்கள்

Upasana Pregnant மெகா குடும்பத்து மருமகளான உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் அவரின் வயதை மக்கள் கூகுளில் தேடுகிறார்கள்.

ராம் சரண்மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரணுக்கும், உபாசனாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் உபாசனா முதல் முறையாக கர்ப்பமாகியிருக்கிறார். இந்த நல்ல செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்து தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் சிரஞ்சீவி. மெகா குடும்பத்துக்கு வரும் ஜூனியருக்கு தற்போதே பலரும் வாழ்த்து தெரிவிக்கத் துவங்கிவிட்டார்கள்.
உபாசனாமெகா குடும்பத்து வாரிசை சுமந்து கொண்டிருக்கும் உபாசனாவை தெலுங்கு சினிமா ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே உபாசனாவின் வயதை பலரும் கூகுளில் தேடுகிறார்கள். 30 வயதை தாண்டிய பிறகு முதல் முறையாக தாயாவது அவ்வளவு நல்லது இல்லை என்று சமூக வலைதளவாசிகள் விமர்சிக்கிறார்கள்.
குழந்தைராம் சரணுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை இல்லையா என்று பலரும் கேட்டு வந்தார்கள். இது குறித்து உபாசனா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, எனக்கு திருமணமான 10 ஆண்டுகளாக சந்தோஷமாக இருக்கிறேன். என் குடும்பத்தை நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது நான் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். முதலில் என் ரிலேஷன்ஷிப் பற்றி கேட்டார்கள். அடுத்து என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர் என் வாழ்க்கை பற்றி விமர்சிக்கிறார்கள் என்றார்.
சத்குருதனக்கு தாயாகும் தன்மை இருக்கிறதா என்று கேட்பது குறித்து உபாசனா கூறியதை கேட்ட சத்குரு கூறியதாவது, தாயாக முடிந்தும் தாயாகாமல் இருக்கும் உபாசனா மற்றும் பிற பெண்களுக்கு நான் விருது கொடுப்பேன். இது தான் நீங்கள் தற்போதைக்கு செய்யும் சிறந்த சேவை ஆகும். நீங்கள் பெண் புலியாக இருந்திருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருப்பேன். ஏனென்றால் புலிகள் இனம் அழிந்து வருகிறது. ஆனால் மனித இனம் அப்படி அல்ல. நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார்.
ஆர்.ஆர்.ஆர்.ராம் சரணின் கெரியருக்கு உதவியாக இருந்து வருகிறார் உபாசனா. கெரியரை பொறுத்தவரை ஷங்கர் இயக்கத்தில் ஆர்.சி. 15 படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இதற்கிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
வதந்திஉபாசனா கர்ப்பமாக இருப்பதாக முன்பு பல முறை வதந்திகள் பரவின. இது பற்றி உபாசனா முன்பு கூறியதாவது, தாயாக பயமாக இருக்கிறது. அதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால் என் தோழிகள் சிறந்த தாய்மார்களாக இருக்கிறார்கள். நானும் இது குறித்து ஆய்வு செய்தேன். அதனால் விரைவில் நான் தாயாகக்கூடும் என்றார். இந்நிலையில் உபாசனா கர்ப்பமாக இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.