ஹூஸ்டன் : அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் டாக்டர் உயிரிழந்தார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மினி வெட்டிகல்,52. டாக்டர், நடனக் கலைஞர், இணையதள எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் மினி, அங்கு ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார்.
சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் அதிவேகமாக வந்த பைக், மினியின் காரில் மோதியது. இதில் நிலைகுலைந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த மினி, அதே இடத்தில் உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement