விஜய் சேதுபதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
நவரசா உள்ளிட்ட வெப் தொடர்கள், ஆந்தாலஜி திரைப்படங்களிலும் நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் நெகடிவ் ரோலில் மாஸ் காட்டினார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படம் வெளியானது. இந்த படம் சற்று மோசமான விமர்சனங்களே பெற்றது. தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவரக திகழும் நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது குண்டான உடல்வாகுவே பலருக்கும் பிடித்தமானது என்றாலும், உடலை குறைத்தால் பழைய விஜய் சேதுபதியை பார்க்க இயலும் என விரும்பக்கூடிய பலரும் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் மிரர் செல்ஃபி எடுத்து அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் எடையை குறைத்து ஸ்லிமாகவிட்டாரா விஜய் சேதுபதி என்று கேட்டு லைக்ஸூகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
வைரல் புகைப்படத்தை இங்கே காணுங்கள்:
முன்னதாக தற்போது ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.