தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாளை(டிச.15) முதல் தொடங்கும் அரையாண்டு தேர்வுகள் டிச.23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதன்படி நாளை(டிச.15) முதல் டிச.23ம் தேதி வரை காலை வேளையில் 6,8,10,12ம் வகுப்புகளுக்கான எழுத்துத் தேர்வுகளும், 7,9,11ம் வகுப்புகளுக்கான எழுத்துத் தேர்வு பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் விநியோகிக்கப்பட உள்ளது.
அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதி முடிவடைந்த உடன் 24ஆம் தேதி முதல் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது போல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கும் மூன்றாவது பருவ தேர்வு தற்பொழுது தொடங்கியுள்ளது.