நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 21 (பிர்கா) கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளது. இந்த 21 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகமாக நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெருவில் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு மேற்படி அலுவலகத்திற்கு தான் வரவேண்டும்.
இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பழுதடைந்து கிடக்கிறது. இந்த அலுவலகத்தின் மேல் சிமெண்ட் காரைகள் சேதமடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் நிலையில் உள்ளது. மேலும் வருவாய் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் பெருமளவில் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.