விருதுகளை குவித்து உலகை அதிர வைத்த திரைப்படம்.. ’Whiplash’-ல் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

2014ம் ஆண்டு வெளிவந்து உலகை அதிர வைத்த திரைப்பாம் விப்லாஷ் (Whiplash). இது Damien Chazelle-ன் முதல் திரைப்படம். தன்னுடைய முதல் படத்தின் மூலமே ஹாலிவுட்டில் தன் முத்திரையை பதித்தார். இத்திரைப்படத்தை மேலும் மெறுகேற்றியது மில்ஸ் டெல்லர் (Miles Teller) & சிம்மன்ஸ் (J.K.Simmons)  ஆகியோரின் நடிப்புதான்.

image

இருவரும் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார்கள். இந்த படத்தில் நடித்ததற்காக J.K.Simmons-க்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

பார்வையாளர்களுக்கு எந்த ஒரு சலிப்பும் ஏற்படுத்தாமல் திரைக்கதையினை மேலும் சுவாரஸ்யமாக கடத்தி சென்றதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் எடிட்டிங்தான். ஒரு திரைப்படத்திற்கு எவ்வாறு எடிட் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் ஒரு பாடமாகவே இந்த படம் திகழ்கிறது.

image

ஃப்ளெட்சர் (Fletcher) என்பவர் இசைக்குழு (music band) ஒன்றை வைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெறுவது என்பது மிகவும் கடினமானது. மில்ஸ் என்ற மாணவனுக்கு டிரம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். அவனுக்கு ஃப்ளெட்சரின் இசைக்குழுவில் வாய்ப்பு பெற, அதன் பிறகு இவ்விருவருக்கும் நடந்த ஈகோ போர்தான் இத்திரைப்படத்தின் கதை.

வசனங்கள்தான் இந்த திரைப்படத்தின் முக்கியமான பலம் என்றே சொல்லலாம். எந்த ஒரு வசனமும் சலிப்புத்தட்டும் விதமாகவோ அல்லது பயனற்றதாகவோ இருக்காது. அனைத்து வசனத்திற்கும் ஏதோ ஒரு காரணம் கொண்டதாகவே பார்வையாளர்களை கதைக்குள் கொண்டு செல்லும் விதமாகவும் அமைந்திருக்கும்.

image

மனிதனின் உணர்ச்சி எல்லைகளையும், அதில் ஈகோ என்ற உணர்வு ஒரு மனிதனை எந்த அளவுக்கு ஒரு எல்லையை அடைய வைக்கும் என்பதை துல்லியமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். இந்த படத்தை பார்த்து முடித்த பிறகும் அதன் தாக்கம் ஆடியன்ஸ் மனதில் நீண்ட நாட்களுக்கு இருந்துக்கொண்டே இருக்கும்.

இந்த விப்லாஷ் படம் பாஃப்டா, கோல்டன் க்ளோம் போன்ற முக்கிய விருதுகளையும் பெற்றிருந்தது. குறிப்பாக ஆஸ்கரில் ஐந்து பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு மூன்று விருதுகளை தட்டித் தூக்கியது. விப்லாஷிற்கு பிறகு டேமியன் இயக்கத்தில் ப்வெளியான lalaland படம் சினிமா உலகில் மிக முக்கியமான படைப்பாகவே கருதப்பட்டு வருகிறது.

image

இந்த நிலையில் வரும் டிசம்பர் 23ம் தேதி டேமியன் இயக்கத்தில் Babylon என்ற படம் ரிலீசாக இருக்கிறது. இதில் Morgot Robbie, Brad Pitt, Tobey Magurie போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பதால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருக்கிறது

– சுஹைல் பாஷா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.