FIFA உலகக்கோப்பை 2022: இறுதி போட்டியில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் அர்ஜென்டினா ஜாம்பவான்


கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை பதிவு செய்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சாதனை நாயகன் மெஸ்ஸி

2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி, 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சாதனை நிகழ்த்தியதுடன், FIFA உலகக் கோப்பையில் தனது 25-வது தோற்றத்தைப் பதிவுசெய்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய ஜெர்மனியின் Matthaus சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார்.

FIFA உலகக்கோப்பை 2022: இறுதி போட்டியில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் அர்ஜென்டினா ஜாம்பவான் | Argentina Lionel Messi Record Fifa World Cup FinalGetty Images

இன்னும் இறுதிப்போட்டி மீதமிருக்கும் நிலையில் அடுத்த போட்டியிலும் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் 11 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனைக்கும் சொந்தகாரரானார். இதற்கு முன் கேப்ரியல் படிஸ்டுடா (Gabriel Batistuta) 10 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

சாதனை மேல் சாதனை

நடப்பு உலகக் கோப்பையில் ஒரே தொடரில் நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி என மூன்று போட்டிகளிலும் கோல் அடித்த ஆறாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

FIFA உலகக்கோப்பை 2022: இறுதி போட்டியில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் அர்ஜென்டினா ஜாம்பவான் | Argentina Lionel Messi Record Fifa World Cup FinalAFP

2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்து கோல்டன் பந்தை கைப்பற்றிய மெஸ்ஸி இம்முறையும் ஐந்து கோல்கள் அடித்து கோல்டன் பூட் ரேசில்., பிரான்ஸ் வீரர் கைலியின் எம்பாப்பே உடன் முதலிடத்தில் உள்ளார்.

அரையிறுதியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெஸ்ஸி இறுதிப்போட்டியிலும் சாதனை மேல் சாதனை நிகழ்த்த காத்திருகிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.