தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர்களில் ஒருவர் தான் விஷால். எப்போது அவர் நடிகர் சங்க பொறுப்புகளை கையில் எடுத்தாரோ அப்போதிலிருந்தே அவரை சுற்றி சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இருப்பினும் அதையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் விஷால். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஷால் சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
Rajini: பாபா ரீரிலீஸ்..வெற்றியா ? தோல்வியா ? வெளியான தகவல் ..!
தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து வெற்றிகளை குவித்து வந்த விஷால் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது லத்தி என்ற படத்தை மிகவும் நம்பியுள்ளார் விஷால்.
லவ் டுடே வெற்றி – ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விஷயங்களை பற்றி பேசி வருகின்றார் விஷால். அந்த வகையில் தன் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள விஷால், முதலில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸுக்கு திருமணம் ஆகட்டும். அவருக்கு திருமணம் நடைபெறும் அதே நாளில் நானும் திருமணம் செய்துகொள்வேன் என்றார் விஷால்.
இதே போல தான் நடிகர் ஆர்யாவிற்கு திருமணம் ஆகும்போது நானும் திருமணம் செய்துகொள்வேன் என்றார். ஆனால் ஆர்யாவிற்கு திருமணமாகி தற்போது குழந்தையே பிறந்துவிட்டது என விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.