Year Ender 2022: இந்தியாவின் டாப் – 10 தேர்தல்கள்!

2022 ஆம் ஆண்டில் நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் குறித்து தற்போது காண்போம்.

கோவா தேர்தல்கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கோவா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.
​பஞ்சாப் தேர்தல்117 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பரிதாபமாக தோல்வி அடைந்தது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை வெற்றி பெற்றது. முதலமைச்சராக, பகவந்த் மான் பதவியேற்றார்.
​மணிப்பூர் தேர்தல்
வடகிழக்கு மாநிலமான 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரியில் முதல் கட்ட தேர்தலும், மார்ச்சில் இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜகவே வெற்றி பெற்றது.
​உத்தரகண்ட் தேர்தல்70 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
உத்தர பிரதேச தேர்தல்நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. முதலமைச்சராக மீண்டும் யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.
​மக்களவை இடைத்தேர்தல்கள்நடப்பு ஆண்டில் இதுவரை 5 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜூன் மாதம், பஞ்சாபின் சங்ருர், உத்தர பிரதேசத்தின், ராம்பூர், அசம்கர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாபில் சிரோண்மணி அகாலி தளம், உத்தர பிரதேசத்தில், பாஜகவும் வெற்றி பெற்றன. இதே போல், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது.
குடியரசு தலைவர் தேர்தல்குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திரெளபதி முர்மு வெற்றி பெற்று நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் ஆனார்.
​குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் ஆனார்.
​குஜராத் தேர்தல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 182ல், 157 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.
​ஹிமாச்சல் தேர்தல்
68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 40 தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ், முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆட்சியையும் அமைத்துள்ளது.
​டெல்லி மாநகராட்சி தேர்தல்
டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 134 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 104 இடங்களில் வெற்றி பெற்று பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.