அரிய வகை நோயுடன் போராடி வருவதை சமூக வலைதளத்தில் அறிவித்த சினிமா பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.
20222022ம் ஆண்டு நிறைவடையப் போகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் நடந்த விஷயங்கள் பற்றி பலரும் நினைத்துப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் தங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை இருந்தால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது எல்லாம் அந்த காலம். தங்கள் பிரச்சனையை தைரியமாக சொல்கிறார்கள் தற்போது உள்ள பிரபலங்கள்.
சமந்தாதனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக தான் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் அறிவித்தார் சமந்தா. மேலும் தான் மயோசிடிஸில் இருந்து பூரண குணமடைவோம் என்று நம்புவதாக கூறினார். அதை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
தென் கொரியாமயோசிடிஸ் பிரச்சனை உடனேயே யசோதா படத்தில் நடித்து முடித்தார் சமந்தா. அந்த படத்தில் நடித்தபோது தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. சமந்தா மேல் சிகிச்சைக்காக தென் கெரியாவுக்கு செல்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் மயோசிடிஸை தைரியமாக எதிர்கொள்ளும் விதம் தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
வருண் தவான்பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவரான வருண் தவானும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார். தனக்கு Vestibular hypofunction எனும் அரிய வகை நோய் இருப்பதாக அண்மையில் ட்வீட் செய்தார். யோகா, பிசியோ, நீச்சல், லைஃப்ஸ்டைலை மாற்றிய பிறகு தற்போது தான் நன்றாக இருப்பதாக கூறினார். வருண் தெரிவித்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஃபிட்னஸ் ஃப்ரீக்கான வருண் தவானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று வியந்தனர்.
பூனம் கவுர்தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பூனம் கவுர். ஹைதராபாத்தில் வசிக்கும் அவர் அரசியல் பக்கமும் சென்றிருக்கிறார். இந்நிலையில் தனக்கு ஃபைப்ரோமயால்ஜியா எனும் அரிய வகை நோய் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். நிறைய திட்டங்கள் வைத்திருக்கும் நபர் தன் வேகத்தை குறைத்து, ஓய்வு எடுக்கும்படி கட்டாயப்படுத்தும் நிலைமையே இது என்று அவர் தெரிவித்தார்.
கெரியர்தங்களுக்கு நோய் இருப்பதாக தெரிவித்தால் பட வாய்ப்புகள் வராது என்று நடிகைகள், நடிகர்கள் பயந்தது அந்த காலம். நோய் இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் பிரபலங்களுக்கு பட வாய்ப்பு அளிக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.