அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரசு கலை – அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணியிடத்துக்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள வேலை தேடுவோர்களிடம் இருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பணி தேடுவோர் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று (15.12.2022) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் (15.12.2022) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுநெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை லெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பா?: தேசிய அளவில் உயர் கல்வி படிப்போரின் விகிதாசாரம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு தனி இடம் இருந்து வருகிறது. இந்த இடத்தை தக்கவைத்து கொள்ளும் விதமாக, அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 6,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், இவர்களில் 4,000 பேரை டிஆர்பி மூலம் நிரந்தர பணியிடத்துக்கும், மீதமுள்ள சுமார் 2,000 பேரை தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களாகவும் நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அ்த்துடன் இவர்களுக்கு மட்டும் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை உதவி்ப் பேராசிரியர்களுக்கு இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும், அதன் விளைவாக மாணவர்களி்ன் கல்வி பாதி்க்கும் அபாயம் உள்ளதாகவும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.