உதயநிதிக்கு பதில் கமல் படத்தில் நடிக்கப்போவது யார்?

நடிகரும், இளைஞரணி செயலாளரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் அமைச்சராக பதவி பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் அணைத்து இலக்காக்களும் அடங்கும், திமுக ஆட்சியில் தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயலர், திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பல முக்கியமான தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  இதுவரையில் 34 அமைச்சர்கள் இருந்த நிலையில் தற்போது உதயநிதி 35வது அமைச்சராக பொறுப்பினை ஏற்றுள்ளார்.  அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் முதல் வேலையாக தனது தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  அதன் பிறகு பேசியவர் தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமனிதன்’ தான் என்னுடைய கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், படத்திலிருந்து தான் விலகுவது குறித்து கமலிடம் தெரிவித்தபோது அவர் மகிழ்ச்சியுடன் தனக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர் என்மேல் இன்றுவரை பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது, அந்த விமர்சனங்களுக்கெல்லாம் நான் எனது செயல்பாடுகள் மூலமாக பதிலுரைப்பேன் என்று கூறியுள்ளார்.  தமிழ்நாட்டை சிறந்த விளையாட்டு நகரமாக உருவாக்குவேன் என்றும், என்னால் முடிந்தவரை எனது கடமைகளை செய்வேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  உதயநிதி இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதால் அந்த கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.