சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், பொங்கலை ஒட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்.
2
6
3
4
7
1
5
திறப்பு விழா எப்போது?சென்னைவாசிகள் எந்தவித நெருக்கடியும் இன்றி ஜனவரி முதல் பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். மேலும் பொங்கல் அன்று கிளாம்பாக்கம் பேருந்து திறக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்தும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக பேருந்து நிலைய பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முன்னதாக பேருந்து நிலையத்தை திறக்க முயற்சித்து பார்க்கலாம். குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க இயலாது. இன்றைய ஆய்வின் போது பல்வேறு புதிய விஷயங்களை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரும், பேருந்து நிலைய ஆய்வாளரும் அறிவுறுத்தியுள்ளனர். அவைகளையும் இணைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே எவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியுமோ, அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.