குமரி: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் வங்கியில் பெற்ற தொகையை செலுத்தாத பெண் ஒருவரை இரவு வரை சிறைபிடித்து வைத்திருந்த வங்கி ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் ஈசாப் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் தனியார் வங்கியில் இருந்து சேமிப்பு குறிகளில் சார்பில் 25,000 ரூபாய் பெற்று ஒவ்வொருவரும் 1000 ரூபாய் கட்ட வேண்டும்.
கடன் எடுத்த பெண்மணி பணத்தை கட்டாத நிலையில் அந்த வங்கி ஊழியர் அவரை சிறைபிடித்ததாக தெரிகிறது. சிறை பிடித்த தகவலை அறிந்த உள்ளுர் பகுதி மக்கள் திரண்டு வந்து வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு இருதரப்பினரிடையே குலசேகர போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.