திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிவதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களை கட்டுப்படுத்த காவல் துறையும், தேவசம் போர்டும் திணறி வருகின்றனர்.
18ம் படி ஏறுவதற்காக சன்னிதானத்திற்கும், மரக்கூட்டம் பகுதிக்கும் இடையே 10 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் இருக்க வயதானவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்து உள்ளது.