குழந்தை பெத்துக்கிட்டா ரூ. 3 லட்சம்… அடடே இந்த திட்டம் சூப்பரா இருக்கே!

இந்தி.யா, சீனா உள்ளிட்ட மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு 1980 கள் முதலே தீவிரமா பின்பற்றுப்பட்டு வருகின்றன. நாம் இருவர் நமக்கு இருவர்; நாம் இருவர் -நமக்கு ஒருவர்; நாம் இருவர்; நமக்கு ஏன் மற்றொருவர் என்று சொல்லி கொள்ளும் அளவு குழந்தைப் பேறு விஷயத்தில் உலக அளவில் வெகுஜென மக்களின் மனநிலை மாறிவிட்டது.

பொருளாதார தன்னிறைவு பெறுவதி்ல் உள்ள சிக்கல்கள், ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று கொள்வதில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உள்ள சிக்கல்கள் போன்ற காரணங்களாலும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்வதில் உலக அளவில் பெரும்பாலான தம்பதிகளுக்கு ஆர்வம் வெகுவாக குறைந்துவி்ட்டது.

இதன் எதிர்விளைவாக சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கையை விட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், இறப்பு விகிதமும் அகிகரித்து வருகிறது. அத்துடன் நாட்டில் சமூக, பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகவும் மக்கள்தொகை அமைந்துள்ளது.

‘ஒசாமா பின்லேடனை கொண்டாடும் பாகிஸ்தான்’ – அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி!

இதனை கருத்தில் கொண்டே. ,ஒரு காலத்தில் குடும் ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி வந்த சீனா, இன்று ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்ளும் இளம் தம்பதிகளை ஊக்குவிக்கிறது.

பிறப்பு விகிதம் குறைவதும், இறப்பு விகிதம் அதிகரிப்பதும் என மக்கள்தொகை விஷயத்தில் சீனா சந்தித்துவரும் சிக்கலை ஜப்பானும் எதிர்கொண்டுள்ளது. அங்கு பிறப்பைவிட இறப்பு விகிதாசாரம் அதிகரித்து வருவதும். முதியோரின் எண்ணிக்கை இளைஞர்களின் எண்ணிககையை விட பன்மடங்கு அதிகமாக உள்ளதும், இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

புகைப்பிடிக்க கூடாது – இளைஞர்களுக்கு சிகரெட் விற்க தடை!

இதனை கருத்தில் கொண்டு அதிக அளவு குழந்தைகளை இளம் தம்பதிகள் பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜப்பான் அரசு விரைவில் செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, புதிதாக குழந்தை பெற்று கொள்ளும் தம்பதிக்கு குழந்தை ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.