டெல்லி : 2023-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் பொங்கலுக்கு பின்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் பொங்கலுக்கு பின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
