பீஜிங் :சீனாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக இத்தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 2291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 2000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5235 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,71,918 ஆக அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement