சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலை அடுத்து இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க 90 சதவீத பணிகள் காந்தி சிலை அருகே நடைபெற உள்ளது.
