டோக்கியோ:ஜப்பானில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்நாட்டு அரசு 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்குகிறது.
கிழக்காசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது. அதே நேரத்தில் இறப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், ஜப்பானில் மக்கள் தொகை படுவேகமாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு, எட்டு லட்சத்து 11 ஆயிரத்து 604 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் அரசு, இதில் ஒன்றாக, தம்பதிகளுக்கான மானியத் தொகையை 3 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement