குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் வழங்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.. இதேவேளை இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 இலட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கமைய குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 இலட்சத்து 20 ஆயிரம் யென் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் ஆக உயர்த்தி 5 இலட்சம் யென் ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் நிதி அமைச்சர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.