கோபன்ஹேகன்: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் நாட்டை சேர்ந்த 33 வயதான ஹென்ரிக் என்பவரை அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று அவரது கைவிரலை கடித்துள்ளது. அதனால் அவருக்கு சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
2018 வாக்கில் அவர் ஒரு பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் அதில் ஒரு குட்டியை வேறு இடத்திற்கு மாற்றும் போது பூனை அவரது விரலை கடித்துள்ளது. அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சில மணி நேரங்களில் அவரது விரல் பகுதி வழக்கத்திற்கு மாறாக வீக்கம் அடைந்துள்ளது.
அதனால் மருத்துவரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. 2018ல் சுமார் நான்கு மாத காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு சுமார் 15 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் அவரது விரலை அகற்ற வேண்டிய சூழல் வந்துள்ளது. அதையும் மருத்துவர்கள் செய்துள்ளனர்.
அதே சமயத்தில் அவருக்கு வாதம் மற்றும் நீரிழிவு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வந்துள்ளது. இதனிடையே பூனை கடித்ததால் சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் வாக்கில் அவர் உயிரிழந்துள்ளார்.
பூனை கடியை யாரும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது அவரது குடும்பத்தினர் அவர் உயிரிழந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.
‘Don’t take any chances’. Danish man, 33, dies from pet cat bite 4yrs later https://t.co/XWxHMINsna #Henrik Kriegbaum Plettner #Denmark #cat bite #flesh eating bacteria #necrotizing fasciitis pic.twitter.com/LRxEwnigbu