தமிழகத்தின் அரசியல் வாரிசே… போஸ்டர் ஒட்டி சம்பவம் செய்த விஜய் ரசிகர்கள்!

தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர் ஆவார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி நடத்தி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜயக்கு தமிழக மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் விஜயின் பிறந்தநாள், படம் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சார்ந்த போஸ்டர்களை ஒட்டி விஜயை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நேற்று முன்தினம் தான் விஜய்யும் சென்னை பனையூரில் உள்ள தனது மன்ற தலைமை அலுவலகத்தில் ரசிகர் சந்திப்பையும் நடத்தினார்.

அதுவே விஜய் அரசியலுக்கு வருவார் என பல விவாதங்களை எழுப்பி வரும் நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில், ‘எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே!’ என்று போஸ்டர் ஒட்டி அசத்தி உள்ளனர்.

‘எந்த இசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும் அந்த போஸ்டரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது மகன் ராகுல் காந்தி, திமுக கட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றைய முதல்வர் ஸ்டாலின், மதிமுக கட்சி தலைவர் வைகோ அவரது மகன் துரை வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரின் வாரிசு அரசியலின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

நேற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்றது ஏற்கெனவே வாரிசு அரசியல் விவாதங்களை எழுப்பி உள்ள நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.