திமுக அரசு மீது தமிழக மக்கள் கோபம்… அதிமுக முன்னாள் அமைச்சர் தூபம்!

திமுக அரசு அண்மையில் உயர்த்திய பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றின் உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தியும் நாமக்கல் நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். அப்போது பால் விலை, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இந்த திமுக ஆட்சியின் மீது உள்ள மக்களின் கோபம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும், குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளதாகவும், அவருடைய செயல்பாடுகள் போகபோக தான் தெரியும்” எனவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக போராட்டத்தில், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

“தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சராக எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்ப்போம். இது என்ன ஜனநாயக நாடா, தாத்தா முதல்வர், அவரின் மகன் முதலமைச்சர், தற்போது பேரன் அமைச்சர்… அடுத்த தை மாதத்தில் துணை முதலமைச்சர். ஸ்டாலின் குடும்பம் இன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டும், கொள்ளையடித்துக் கொண்டும் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்?, திமுகவுக்கு என்ன செய்தார்?, போராட்டத்தில் ஈடுபட்டாரா, சிறைக்கு சென்றாரா என்று சிவி சண்முகம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசும்போது, “காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகள் இருந்ததால், அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால், காங்கிரசை விட திமுக மோசமாக உள்ளது. திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள். கருணாநிதி கூட ஸ்டாலினுக்கு இறுதிவரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமாக பதவி கொடுக்கிறார்கள். ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். ஆனால் வைகோ தற்போது எதுவும் பேசவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை. திமுக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.” என்று சாடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.