தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றுள்ளது.
தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிடையே நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான
தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று (15.12.2022) நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக முதலிடத்தை பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பெற்றுக்கொண்டார்.