நகரங்களை மதிப்பீடு செய்ய இணைய வழி கணக்கெடுப்பு| Dinamalar

புதுச்சேரி : இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களை மதிப்பீடு செய்வதற்கான இணைய வழி கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களில் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் எந்த அளவிற்கு உகந்தாக உள்ளது என்பதை மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது.

இதற்காக நகர மக்களிடம் கேட்க முடிவு செய்து, அதற்கான கணக்கெடுப்பை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான இணைய வழி கணக்கெடுப்பு கடந்த 9 ம் தேதி துவங்கி வரும் 23ம் தேதிவரை நடக்கிறது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று கடற்கரை சாலை ஸ்மார்ட் சிட்டி அலுவலகம் அருகே நடந்தது. ஸ்மார்ட் சிட்டி செயல் தலைவர் அருண் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரி நகரம் எந்த அளவிற்கு வாழ தகுதியுடைய நகரமாக உள்ளது என்பதை https://eol2022.org என்ற இணைய வழியாக பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இதன் மூலம் புதுச்சேரியின் வளர்ச்சி, தனித்துவத்தை மேம்படுத்த முடியும். இந்த கணக்கெடுப்பில் புதுச்சேரி மக்கள் பங்கேற்க வேண்டும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.