டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஹர்திப் சிங் புரி விளக்கமளித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரந்ததற்கு ஈடாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
