பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரியில் வெடிவிபத்து ஆய்வு..!!

கோவை: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் பாறைகளை உடைக்க வெடிவைக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாய நிலங்களுக்குள் கற்கள் விழுவதாக வந்த புகாரையடுத்து, கனிமவளத்துறை அதிகாரி சசிகுமார் ஆய்வு நடத்தினார். சிங்கையன்புதூர் பகுதியில் கல்குவாரியில் வெடிவிபத்து ஆய்வு நடத்தப்பட்டது; வேளாண் நிலங்களுக்குள் கற்கள் விழுவது உறுதியானது. குறைந்த அளவில் வெடி மருந்துகளை நிரப்பி பாறைகளில் கற்களை உடைக்க குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.