அம்ரேலி, குஜராத்தில் கணவனை இழந்த பெண், மறுமணம் செய்ததை அடுத்து, முன்னாள் கணவரின் உறவினர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண், கணவனை இழந்ததை அடுத்து அண்மையில் மறுமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவரது முன்னாள் கணவரின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் தலையை மொட்டை அடித்து, கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தன் நான்கு குழந்தைகளில் ஒன்றை பார்த்துக் கொள்ளுமாறு அந்தப் பெண் கேட்டபோது, இந்தத் தாக்குதல் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், போலீசார் அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரின் சகோதரி உட்பட இருவரை கைது செய்து, மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement