
மீண்டும் நடிக்கத் தொடங்கினார் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு படங்களில் நடிக்காத பாரதிராஜா ரெட்டைச்சுழி படத்தின் மூலம் நடிக்க வந்தார். முதல் மரியாதை 2ம் பாகம்தான் அவர் கடைசியாக இயக்கிய படம். அதில் நடிக்கவும் செய்திருந்தார். அதன்பிறகு பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். கடைசியாக தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் அவரது தாத்தாவாக நடித்தார்.
இதுதவிர தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்திலும், சுசீந்திரன் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து பூரண நலம் பெற்று திரும்பிய பாரதிராஜா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் படப்பிடிப்புகள் பாரதிராஜாவுக்காக 130 நாட்கள் காத்திருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். யோகிபாபுவுடன் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கினார் தங்கர் பச்சான்.