திருமலை: இந்தியா முழுவதும் உள்ள யாத்திரை தலங்களை மேம்படுத்தவும் அடையாளம் காணவும் ஒன்றிய அரசு பிரசார திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மரம்பா சமேத மல்லிகார்ஜூன சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலைகள், விளக்குகள் அமைக்க ரூ.43 கோடி மதிப்பிலான திட்டங்களை ஜனாதிபதி திரவுபதிமுர்மு தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக வருகிற 26ம் தேதி மதியம் 12.15 மணிக்கு ஸ்ரீசைலம் வருகிறார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக சுற்றுலாத்துறை செயல் பொறியாளர் ஈஸ்வரய்யா தெரிவித்துள்ளார்.